#
அவள் என் மீது கோபமாய் உமிழ்ந்தாள்
நானும் திருப்பி உமிழ்ந்தேன் என் எழுதுகோலால்
காகிதத்தில் கவிதை
#
பெண்ணே நீ அழகானவளா என்று எனக்குத் தெரியாது
ஆனால் இந்த உலகில் நான் ரசிக்கும் ஒரே ஓவியம் நீ
#
உலகின் மிகச்சிறந்த சிற்பிகள் இருவரை நான் பார்த்திருக்கிறேன்
வேறு யாரும் இல்லை, என்னவளின் பெற்றோர்
#
உன்னில் அப்படி என்ன எரிபொருள் இருக்கிறது
என் ஈர இதயத்தையும் எரிய வைப்பதற்கு
#
உன் சூரிய விழி ஒளி பட காத்திருக்கிறது
இந்த பித்துப்பிடித்த தாமரை
#
மூடி இருந்த என் மனக்கதவை திறந்து வைத்தவள் நீதானே
பின் ஏன் உள் வர தயங்குகிறாய்
#
உனக்கென விற்றுவிட்ட என் இதயத்தை வேறு யாருக்கு
கொடுப்பது, ஒன்று புரிந்துகொள் பெண்ணே ஆண்களுக்கும் கற்பு உண்டு
#
வாசமிகு அல்லி மலரே, நீ வளர்த்து விட்ட நம் கனவு
வசந்தமாவது எப்போது
காத்திருக்கிறேன் உனக்காக
#
நான் மரம்,
நீ விடும் கரிஅமிலவாயுவில் அல்லவா நான் வாழ்கிறேன்
#
பெண்ணே உன்னைக் காதலித்தேன் உன்
மின்னல் பார்வை என்னைக் குருடாக்கியதால்
#
காதல் - அது வென்றால்
கழுத்தில் நாண், தோற்றால்
கயிற்றில் நான்
#
காதலன் நான் என்று வானில் பறந்து வந்த என்னை
உன் காதலனைக் காட்டி வருந்த வைத்து விடாதே
#
எரிகிறது இதயம், சுடுகிறது நிலா
கசக்கிறது ஊன்
ஓ! நான் காதல் வசப்பட்டுள்ளேன்
#
இரவின் இருக்கத்தில் என் இமைகள் மட்டும்
விழித்திருந்தது
என் காதலின் முதல் தியாகம்
#
அன்பே, உன் இமை அசைவால் என் இயக்கத்தை நிறுத்தினாய்
எங்கே உன் உதட்டசைவால் அதனை செயல்படுத்து

"ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம்
வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" –
நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா.
நானும் விவரிக்க ஆரம்பிதேன்.
"வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும்.
அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல
இருந்தே செய்யணும்.
இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய
தயாரா இருக்கான்."
"அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்".
"இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank,
இல்ல எதாவது கம்பெனி, "நான் செலவு செய்ய தயாரா இருக்கேன்.
எனக்கு இத செய்து கொடுங்க கேப்பாங்க.
இவங்கள நாங்க "Client"னு சொல்லுவோம்.
"சரி"
இந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க
பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு "Sales Consultants, Pre-Sales Consultants....".
இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க.
காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்?
ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா?
அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், "முடியும்"னு பதில் சொல்றது இவங்க வேலை.
"இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க"?
"MBA, MSனு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க."
"முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு
எதுக்கு MBA படிக்கணும்?" –
அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது.
"சரி இவங்க போய் பேசின உடனே client project கொடுத்துடுவானா?"
"அது எப்படி? இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிளையும்
இருப்பாங்க. 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள
முடிச்சு தரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க.
இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு
ப்ராஜெக்ட் கிடைக்கும்"
"500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50
நாள்ல எப்படி முடிக்க முடியும்? ராத்திரி பகலா வேலை பார்த்தாலும்
முடிக்க முடியாதே?"
"இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க
புரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான்.
ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும்
தெரியாது, என்ன செய்யனும்னு நமக்கும் தெரியாது.
இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒன்ன நாங்க deliver பண்ணுவோம்.
அத பாத்துட்டு "ஐய்யோ நாங்க கேட்டது இதுல்ல,
எங்களுக்கு இது வேணும், அது வேணும்னு" புலம்ப ஆரம்பிப்பான்.
"அப்புறம்?" - அப்பா ஆர்வமானார்.
"இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே
"இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்"னு சொல்லுவோம்.
"CR-னா?"
"Change Request. இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க
வேலை பார்த்துட்டோம்.
இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்"னு
சொல்லுவோம்.
இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்."
அப்பாவின் முகத்தில் லேசான பயம் தெரிந்தது.
"இதுக்கு அவன் ஒத்துபானா?"
"ஒத்துகிட்டு தான் ஆகணும்.
முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வர முடியுமா?"
"சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?"
"முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம்.
இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு.
இவரது தான் பெரிய தலை.
ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு."
"அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம்
தெரியும்னு சொல்லு."
"அதான் கிடையாது.
இவருக்கு நாங்க பண்ற எதுவும்யே தெரியாது."
"அப்போ இவருக்கு என்னதான் வேலை?" –
அப்பா குழம்பினார்.
"நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போ எவன் குழி பறிப்பானு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன்
ஆகுறது தான் இவரு வேலை."
"பாவம்பா"
"ஆனா இவரு ரொம்ப நல்லவரு.
எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்."
"எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?"
"ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு.
நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை
எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை."
"நான் உன்னோட அம்மா கிட்ட பண்றத மாதிரி?!"
"இவருக்கு கீழ டெக் லீட், மோடுல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு
நிறைய அடி பொடிங்க இருப்பாங்க."
"இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா
வேலை ஈஸியா முடிஞ்சிடுமே?"
"வேலை செஞ்சா தானே?
நான் கடைசியா சொன்னேன் பாருங்க...
டெவலப்பர், டெஸ்டர்னு, அவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க. அதுலையும் இந்த டெவலப்பர்,வேலைக்கு சேரும் போதே "இந்த குடும்பத்தோட மானம், மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு"
சொல்லி, நெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி
தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க."
"அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே?
அவங்களுக்கு என்னப்பா வேலை?"
"இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது
இவனோட வேலை.
புடிக்காத மருமக கை பட்டா குத்தம்,
கால் பட்டா குத்தம் இங்குறது மாதிரி."
"ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா?
புதுசா தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா.
சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள?"
"அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா,
அந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு
இருக்கும். நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை
செய்துக்கலாம்னு சொல்லுவாங்க"
"கிளையன்ட் சும்மாவா விடுவான்?
ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்?"
"கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டிமுக்குள்ளையே
காலை வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார ஆரம்பிப்போம்."
"எப்படி?"
"நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு.
அன்னைக்கு டீம் மீட்டிங்ல வச்சி நீ இருமின,
உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிகலை."
இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம்.
அவனும் சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சு,
இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்".
"சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய
கழுவிட்டு வந்துடுவீங்க அப்படித்தான?"
"அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம
தான் இருக்கணும்."
"அப்புறம்?"
"ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான
ஒன்ன பண்ணி இருக்குறமாதிரியும், அவனால அத புரிஞ்சிக்க
கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்."
"அப்புறம்?"
"அவனே பயந்து போய்,
"எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்-ல ஒரு ஒன்னு, ரெண்டு
பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு"
புது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க."
இதுக்கு பேரு "Maintenance and Support".
இந்த வேலை வருஷ கணக்கா போகும்.
"ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு
கூட்டிட்டு வர்றது மாதிரி.
தாலி கட்டினா மட்டும் போதாது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு" இப்போ தான் கிளைன்டுக்கு
புரிய ஆரம்பிக்கும்.
"எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுப்பா."
ஒரு மின்னஞ்சலில் இருந்து...

அச்சத்தில் இருப்பவர்களில் தொடங்கி உலை கொதிக்கும் நேரத்தில் அரிசிக்கு வழி தேடுபவர்கள்வரை பலதரப்பினருக்கும் ஏதோ ஒரு மனச்சோர்வு ஏற்படத்தான் செய்கிறது. தனிமை - தோல்வி பற்றிய அச்சம் - தோற்ற வலியின் மிச்சம் - இழப்புகள் - ஏமாற்றம்… என்று எத்தனையோ புறக்காரணங்களைப் பட்டியலிடலாம்.
ஆனால், மனச்சோர்வின் மூல காரணத்தைக் கண்டறிந்தவர்கள், அதனை வேரோடு பிடுங்கி வீசிவிட்டு, உற்சாகத்தின் ஊற்றுக் கண்களாய் உலா வருகிறார்கள்.
சிகிச்சை பெறும் அளவு தீவிரமான நிலையில் சில மனநோய் அறிகுறிகள் ஏற்படுவது வேறு விஷயம். பலரும் மனச்சோர்வுக்கும் மனநோய்க்கும் வேறுபாடு தெரியாமல் பயந்துவிடுகிறார்கள்.
அன்றாட வாழ்க்கையில் - அலுவல்களுக்கு நடுவில் - விரும்பத்தகாத சில விஷயங்கள் நடந்தால் சட்டென்று நம்மை சுற்றிக் கொள்கிற மனச்சோர்வுதான் நம் செயலாற்றலைப் பாதிக்கிறது. உண்மையில், கொஞ்சம் புரிதலும் கூர்மையான உணர்தலும் இருந்தால் மனச் சோர்விலிருந்து மிக எளிதாக விடுபடலாம்.
வாகனமொன்றில் புறப்படுகிறீர்கள். எரிபொருள் நிரப்பிக்கொண்டு கிளம்புகிறீர்கள். பத்தே நிமிடங்களில் எரிபொருள் தீர்ந்துவிடுகிறது. மறுபடியும் நிரப்புகிறீர்கள். பத்து நிமிடங்களில் மீண்டும் வாகனம் நின்று விடுகிறது. வாகனத்துக்குள் மாயப்பிசாசு மறைந்திருந்து எரிபொருள் பருகுகிறது என்றா நினைக்கிறீர்கள்?
எரிபொருள் நிரப்பும் கொள்கலனில் ஓட்டை விழுந்திருக்கிறது. தாரைதாரையாய் ஊற்றுகிற எரிபொருள் தரையோடு போய்விடுகிறது. அதை கவனிக்காத வரையில் பயணம் தொடரமுடியாது.
மனிதன் தன் உடலில் - உணர்வுகளில் - சேமித்து வைத்திருக்கும் சக்தியை விரயம் செய்கிற ஓட்டைதான் மனச்சோர்வு. உங்கள் உயிராற்றல் - உங்கள் சக்தி நிலை எங்கோ எப்படியோ வீணாகிறபோதுதான் சோர்வு பிறக்கிறது. அந்த ஓட்டைகளை அடைக்கிற உத்தி என்னவென்று நம் புத்திக்குப் புலப்பட்டால் போதும். மனச்சோர்விலிருந்து நிரந்தர விடுதலை நிச்சயம் சாத்தியம்!
உண்மையில், ஒவ்வொரு விநாடியும் நாம் கொடுக்கல் வாங்கலை நிகழ்த்திக் கொண்டேயிருக்கிறோம். நம் ஒவ்வோர் அசைவிலும் சக்தியின் வரவோ செலவோ நடக்கிறது.
நம்பிக்கை, நல்ல வார்த்தைகள், நட்பு, நேசம், இலட்சியம் போன்ற அம்சங்களில் ஈடுபடும்போது சக்தியை வரவு வைக்கிறோம்.
எதிர்பார்ப்பு, ஏக்கம், இழப்பில் ஏற்படும் அதிர்ச்சி, கோபம், வாக்குவாதம், பொறாமை போன்ற உணர்வுகளுக்கு ஆட்படும்போது சக்தி நம் கையைமீறி நம்மைவிட்டுப் போகிறது.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், வரும்போது சக்தி காட்டு வெள்ளம் போல் வருகிறது. போகும்போதும் அதே வேகத்தில் காட்டு வெள்ளம்போல் காணாமல் போகிறது.
மனிதனின் சக்தி மிக அதிகமாக விரயமாகி மனச்சோர்வுக்கு வழி வகுப்பது கோபத்தில்தான். பலரும் கோபமே படக்கூடாது என்றெல்லாம் சொல்கிறார்கள் அப்படி இருப்பது சாத்தியமா? கோபம் என்கிற உணர்வு, உணவில் உப்பைப் போல் ஒரு துளி தேவை. கோபப்படாத போது ஒரு சில காரியங்கள் நடப்பதில்லை. சில தவறுகளை சிலர் உணரச் செய்ய வேறுவழியில்லை.
ஆனால் ஒன்றை சீரமைக்கவோ சுட்டிக்காட்டவோ கோபம் என்பதொரு கருவி மட்டும்தான் என்பதை மறந்துவிடக்கூடாது. பலரும் கோபத்தின் கைகளில் தங்களையே ஒரு கருவியாய் ஒப்படைத்து விடுகிறார்கள். அப்போதுதான் சக்தி வற்றிப்போய், சகலர் மீதும் நம்பிக்கையற்று, எல்லோருமே தமக்கெதிராய் இருப்பது போன்ற உணர்வில் சோர்வுக்கு ஆளாகிறார்கள்.
கோபத்தை, வேண்டிய சதவிகிதத்தில் மட்டும் பயன்படுத்துங்கள். கோபத்தின் கைகளில் ஆட்பட்டு விடாதீர்கள். கோபம் எப்படி வேலை செய்கிறது என்பதை சில ஆராய்ச்சிகள் சொல்லக் கேட்கையில் ஆச்சரியமாய் இருக்கிறது.
நீங்கள் ஒருவர்மேல் கோபம்கொண்டு, அவரைத் திட்டவேண்டும் என்றுகூட இல்லை. எங்கோ தொலைதூரத்தில் இருக்கிறார், அவரைப்பற்றி நினைக்கிறபோது உங்கள் மனதில் கோபம் உருவாகிறது என்றாலே, உங்கள் சக்தி அங்கே விரயமாகத் தொடங்குகிறது. அந்தக் கசப்பான நினைவுகள் கசக்கிப் பிழிவதில் சொட்டுச் சொட்டாய் உங்கள் சக்தி வற்றுகிறது. உங்கள் கோபத்திற்குரியவர் அங்கே தன்னுடைய வேலையை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருப்பார். இந்தக் கோபம் அவசியம்தானா என்று கோபப்படாமல் சொல்லுங்கள்.
மனச்சோர்வின் மற்றொரு மூலம், இழப்பில் ஏற்படும் அதிர்ச்சியும், வருத்தமும். இழக்கக்கூடாத ஒரு தனிமனிதரையோ - பொருளையோ - வணிக வாய்ப்பையோ இழந்து விடும் நிலை உருவாவதாக வைத்துக் கொள்வோம்.
அதில் வருகிற வலியை - வருத்தத்தை - வேதனையை உள்வாங்குங்கள். அதை அனுபவியுங்கள். அந்த வலி வளரும்போதே “அடுத்தது என்ன” என்பதை நோக்கி உங்கள் கவனத்தைத் திருப்புங்கள்.
இந்த இழப்பை எப்படி ஈடுகட்டுவது என்று யோசியுங்கள். யோசிப்பதோடு நிறுத்தாமல் உடனே அதை நோக்கி ஓரடியாவது எடுத்து வையுங்கள்.
நம் கட்டுப்பாட்டைக் கடந்து ஒன்று நிகழ்ந்துவிட்டதே என்ற அதிர்ச்சியிலேயே அமர்ந்துவிட்டால் அது பெரும் சோர்வை ஏற்படுத்தும். அந்த அதிர்ச்சியின் எதிர்விளைவாக சூழ்நிலையை இனியாவது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவோம் என்கிற முயற்சியே நம்மை இழப்பிலிருந்து மீட்டெடுக்கும்.
எல்லா மனிதனுக்குள்ளேயும் வாழ்வின் ஏதாவதொரு வலிமிகுந்த நேரத்தில் அடுத்தவர்களின் அனுதாபம் அவசியம் என்கிற தேடல் இருக்கிறது. மனச்சோர்வில் மற்றவர்களின் ஆறுதலை எதிர்பார்த்து, அந்த ஆறுதல் கிடைக்கா விட்டால் அதுவே மனச்சோர்வை அதிகரிக்கும் விஷயமாகிவிடும்.
“தாயும் பிள்ளையும் ஆனால் கூட வாயும் வயிறும் வேறு வேறுதான்” என்றொரு பழமொழி உண்டு. தன்கையை ஊன்றித் தானே எழுவதுதான் பலம்.
நாம் கொள்கிற கவலைகள் - மனச்சோர்வு ஆகியவற்றுக்கு இரண்டு முகங்கள் உண்டு. ஒருமுகம் - உண்மையான காரணம். மறுமுகம் - ஆறுதல் தேடுகிற இயல்பு.
இந்த இரண்டாவது முகம் எப்படி உருவானது என்பதே நுட்பமான ஓர் உண்மை. குழந்தை ஓர் ஓவியத்தை வரைந்துகொண்டு வந்து அம்மாவிடம் காட்டுகிறது. “சரி சரி”. நல்லாதான் இருக்கு! போய்ப்படி” என்று சமைத்துக்கொண்டே சொல்லிவிடுகிறார் அம்மா.
அலுவலக வேலையிலோ தொலைக் காட்சியிலோ மூழ்கிவிடுகிற அப்பாவும் மேலோட்டமாகப் பார்த்துவிட்டு பேருக்குப் பாராட்டுகிறார். அந்த வார்த்தைகளும் அரவணைப்பும் குழந்தைக்குப் போதவில்லை.
அறைக்குள் போய் ஓவியத்தை வெறுப்போடு வீசுகிறது. மேசையில் இருந்த கண்ணாடி சீசா சரிந்து கீழே விழுந்து “சிலீர்” என்ற சப்தத்துடன் நொறுங்குகிறது.
அடுத்த விநாடியே அம்மாவும் அப்பாவும் அறைக்குள் வந்துவிடுகிறார்கள். பத்துப்பதினைந்து நிமிடங்கள் இடைவிடாமல் திட்டுகிறார்கள். ஓவியத்தைப் பாராட்ட நேரமில்லாத இருவருக்கும் உடைந்த கண்ணாடிக்காகத் திட்டுவதற்கு நிறைய ….. நிறைய …..நேரமிருக்கிறது!
குழந்தையின் மனதில், தான் திட்டப்படுகிறோம் என்பதை விடவும் பெற்றோரின் கவனத்தை ஈர்த்துவிட்டோம் என்கிற திருப்தி நிலவுகிறது. தவறு செய்கிறபோது கவனத்தை ஈர்க்க முடியுமென்று தெரிந்து கொள்கிறது.
உற்சாகமாக ஓடிவிளையாடும்போது ஊக்கம் தராத பெற்றோர்கள் உடம்பு சரியில்லை என்று படுத்துவிட்டால் பக்கத்திலிருந்து பார்த்துக் கொள்கிறார்கள் என்ற எண்ணம் குழந்தைக்கு ஏற்பட்டால் தன்னையும் அறியாமல் அடிக்கடி நோய் வாய்ப்படுகிறது.
பல குழந்தைகளுக்கு, பெரியவர்களாக வளர்ந்த பிறகும், இதே மனநிலை தொடர்கிறது. குழந்தையாய் இருந்தபோது கிடைத்த கவனிப்பு வளர்ந்த பிறகு கிடைக்காத வருத்தத்தில் மனச்சோர்வு ஏற்படுகிறது.
இந்த மனநிலை மாறும் தனக்குள்ளேயே ஊக்கம் தேடும் தெளிவும் ஊக்கமும் பிறந்ததாலேயே மனச்சோர்வு தோன்ற வாய்ப்பில்லை.
மனச்சோர்வு என்பது உணர்வுரீதியாய் ஏற்படுகிற பின்னடைவு, அதனை நேர்மறை உணர்வுகளால் சீரமைத்து அறிவுரீதியாய் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து போகவேண்டும்.
நம்மீது நமக்கே வருத்தமோ நம்பிக்கையின்மையோ ஏற்படுகிறதா? அப்போதுதான் நமக்கு நாமே இன்னும் ஆதரவாய், நமக்கு நாமே இன்னும் நெருக்கமாய் இருக்க வேண்டும்.
மனச்சோர்வுக்கு ஆட்படும் நேரங்களில் பலர் நிறைய சாப்பிடுவார்கள். ஏற்பட்ட வெற்றிடத்தை இட்டு நிரப்பவேண்டும் என்கிற உந்துதலில் அப்படித் தோன்றும். நிறைய சாப்பிடுவது என்று தோன்றுகிற மனநிலையைக் விட சற்று கூர்ந்து கவனித்து சரியாகக் கையாண்டால் வியப்பளிக்கும் விதமாய் மாற்றங்களைப் பார்க்கலாம்.
பழங்கள் - தானிய வகைகள், உலர் பழங்கள் போன்றவற்றை சாப்பிடுவது - பழச்சாறு, இளநீர் பருகுவது - மனச்சோர்வு நேரத்தில் ஏதேனும் ஓர் இனிப்பை சாப்பிடுவது என்பதெல்லாம் சக்தி தருகிற உணவு ரகங்கள் மூலம் நமக்குப் புத்துணர்வு தந்து கொள்கிற முறை.
மனச்சோர்வுக்கு உடனடிக் காரணமாய் நாம் சில சம்பவங்களை சொல்கிறோம். அந்த சம்பவங்களுக்காக சங்கடப்பட்டுக் கொண்டிருக்காமல் மனதில் தடுமாற்றத்தை மடை மாற்றம் செய்து, சக்தியை சேமித்துக் கொள்ளுங்கள். இந்தப் பழக்கம் ஒரு பயிற்சியாக வளர வளர மனச்சோர்விலிருந்து விடுதலை பெறலாம்……. நிரந்தரமாக!
ஒரு மின்னஞ்சலில் இருந்து.

நாள்: 25.09.1983
சோ... வென்று மழை. ...
பள்ளியில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருக்கிறான் கரன்... மேகம் மட்டும் பொழியவில்லை அவன் கண்களும் தான், அவன் கண்ணங்களின் வழிந்தோடும் கண்ணீரை மழை நீர் மறைத்திருந்தது... அவனால் வேதனையை தாங்க முடியவில்லை... நடக்கும் போது தன் கால்களால் சாலையில் ஓடும் நீரை கிழித்தபடி செல்கிறான்...
வீடு வருகிறான், தன் தந்தையை கட்டி கொண்டு அழுகிறான், இந்த தாயில்லா சிறுவன். தந்தை ஆசுவாச படுத்துகிறார்... எனினும் அவராலும் தன் பிள்ளையை அமைதி படுத்த முடியவில்லை...
இரவெல்லாம் வலியை அவனால் தாங்க முடியவில்லை... இரவு முழுவதும் அவனால் உறங்க முடியவில்லை... அன்றோடு தன் பள்ளியை விட்டு அவன் விலகுகிறான்... தன் மிக நெருங்கிய நண்பர்கள், தன்னை பாராட்டி வளர்த்த ஆசிரியர்கள், அடிக்கடி அவனுடன் விளையாடும் அணில் குட்டிகள், தன் பள்ளிக்கூட மைதானத்தில் இருக்கும் மிகப்பெரிய அத்தி மரம், அதன் கீழ் சிதரிகிடக்கும் அத்திப் பழங்கள், இன்னும் பல, அவன் இழக்க போவது.
மறுநாள் அவன் தந்தை அவனை கூட்டிக்கொண்டு வெளி நாடு செல்லும் ஆயத்த பணிகளை தொடர்வார். ஏன் இப்படி? மற்றவர் செய்யும் தவறுக்கு, நாம் அனைத்தையும் இழக்க வேண்டுமா? இந்த ஒழுங்கீனத்தை மாற்ற நாம் ஏதாவது செய்ய வேண்டும் என சிந்திக்கிறான். அந்த வயதில் அவனால் அப்படி சிந்திக்கத் தான் முடிகிறது, எதுவும் செய்ய முடியவில்லை.
இரவு விடை பெற விடியலை நோக்கி அவனுடைய பூமி பகுதி வேகமாக சுழன்று கொண்டிருந்தது. அதே வேகத்தில் வெளிநாட்டில் அவன் வாழ்கையின் நாட்களும் தான்.
வெளிநாட்டு மண் மடியில் அவனது 26 வருடங்கள் ஓடின... அங்கு நன்றாக படித்து ஒரு நல்ல பணியில் அந்த நாட்டின் குடிமகனாய் அவன். வருடங்கள் கடந்தாலும் தன் தாய் நாட்டின் மீதுள்ள நாட்டம் அவனுக்கு குறையவே இல்லை.
தன் தந்தை மரணமடைய தனி மனிதன் ஆகிறான், தன் சொந்தங்களையும் நண்பர்களையும் காண ஏங்குகிறான். தன் நாட்டிற்க்கு மீண்டும் ஒருமுறையேனும் சென்று வர ஆயத்தப்பட்டான். தன் மேலாளரிடம் பத்து நாட்கள் விடுப்பு எடுத்து தன் நாட்டிற்கு பயணமானான்.
நாள்: 13.12.2009
விமானத்தில் பறந்து கொண்டிருந்தான். விமானம் இரவின் மேகங்களை கிழித்துக் கொண்டு செல்கிறது.
இரவெல்லாம் மகிழ்ச்சியை அவனால் தாங்க முடியவில்லை... இரவு முழுவதும் அவனால் உறங்க முடியவில்லை... பள்ளியை காணப் போகிறான்... தன் மிக நெருங்கிய நண்பர்கள், தன்னை பாராட்டி வளர்த்த ஆசிரியர்கள், அடிக்கடி அவனுடன் விளையாடும் அணில் குட்டிகள், தன் பள்ளிக்கூட மைதானத்தில் இருக்கும் மிகப்பெரிய அத்தி மரம், அதன் கீழ் சிதரிகிடக்கும் அத்திப் பழங்கள், இன்னும் பல, அவன் மீண்டும் பார்க்கப் போவது.
நாள்: 14.06.2009
மறுநாள் தன் நாட்டின் வானவூர்தி நிலைய பாதையின் பக்கங்களை, தன் சக்கரங்களால் எதோ எழுதியபடி விமானம் தரை இறங்கியது.
விமானத்தில் இருந்து வெளியே வந்தான், தன் தாய் நாட்டின் காற்று அவன் முகத்தை கழுவி விட்டது. சிலிர்த்தான். தன் தாய் மண்ணின் சுவாசத்தை நுகந்து மகிழ்ந்தான் .
மிகுந்த மகிழ்ச்சியுடன் காலை உணவை அங்குள்ள சிற்றுண்டியில் முடித்துக்கொண்டு தன் ஊர் செல்லும் பேருந்தில் பயணமானான்... அந்த பேருந்து தனக்கே உரிய இசையை உதிர்த்துக் கொண்டிருந்தது... பல வயல் வெளிகளை, மலைத்தொடர்களை கடந்து சென்றது... இதையெல்லாம் இத்துனை நாள் தொலைத்துவிட்டோமே என்று எண்ணினான்... மாலை தன் ஊர் வந்து அடைந்ததும் பேருந்திளிரிந்து மகிழ்ச்சியாய் வேகமாக இறங்கினான்... தணியாத ஆர்வத்தோடு, தன் பள்ளியை நோக்கி நடந்தான்...
அவன் ஊரே வித்தியாசப் பட்டிருந்தது, 26 வருடங்கள் ஆயிற்றே... ஒரு வழியாக அவன் பள்ளி இருக்குமிடத்திற்கு சென்றான்.
அங்கு.... அங்கு.... அவன் பள்ளி போன்று ஒரு கட்டடம், எரிந்து இடிந்த நிலையில், அதனுல் ஒரு அத்திமரம் , முக்கால்வாசி எரிந்து, பட்டு போன நிலையில்.
அந்தோ!! அது அவன் பள்ளியே தான்...
அவன் பள்ளி மீது தாங்குதல் நடந்துள்ளது. அருகில் இருக்கும் மருத்துவமனைக்கும் அதே கதி தான். அவன் நண்பர்களையும், சொந்தங்களையும் அவ்வூரில் காணவில்லை. சில்லரையாய் அவர்கள் வெவ்வேறு ஊர்களில்(சொர்கபுரியையும் சேர்த்து) சிதறி கிடப்பார்கள் என்பதை உணர்ந்தான். அவன் ஊரே நாசமாகி இருந்தது.
அதிர்ச்சியில் தன் மன முதிர்ச்சியையும் முந்திக்கொண்டு தரையில் விழுந்து புரண்டான். கத்தினான், கதறினான் தன் சட்டையை கிழித்தான்.
எரியும் விளக்காய் அவன் நாடு, அதில் கருகிய திரிகளாய் அவன் இன மக்களின் உடல்கள், விளக்கு நெய்யாய் அவர் தம் குருதி. வேறு இனம் என்னும் ஒரே காரணத்தால் தன் நாடே அவர்களை அழிக்கிறது.
தீயில் இடப்பட்ட அவன் சொந்தங்கள், அவன் மனதை தீயிட்டு எரித்தனர். இவ்வளவு காலம் என் இனத்திற்கு என்னால் எதுவும் செய்ய முடியவில்லை, அவனது அந்த குற்ற உணர்வு, அவன் மீது படும் குளிர் மாலைக் காற்றையும் கனலக்கிப் பார்க்கிறது. அவனது கண்ணீர் மண்மீது பட்டு குருதியின் நிறமாய் தெரிகிறது.
மண் மீது துடிக்கும் பிண்டம் போல் அவன். கண்களில் சீவனதியாய் அவனது கண்ணீர். மணிக்கணக்கில் அழுது புரண்டான்.
நேரம் கடந்து வானம் இருட்டியது. தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டான். இப்போது என்ன செய்ய வேண்டும்... தனக்குள் கேட்டுக் கொண்டான்... எஞ்சி இருக்கும் தன் மக்களையாவது காப்பாற்ற வேண்டும்.
இரவெல்லாம் வலியை அவனால் தாங்க முடியவில்லை... இரவு முழுவதும் அவனால் உறங்க முடியவில்லை... எனினும் அவன் பள்ளியை மீண்டும் காணப் போகிறான்... தன் மிக நெருங்கிய நண்பர்கள், தன்னை பாராட்டி வளர்த்த ஆசிரியர்கள், அடிக்கடி அவனுடன் விளையாடும் அணில் குட்டிகள், தன் பள்ளிக்கூட மைதானத்தில் இருக்கும் மிகப்பெரிய அத்தி மரம், அதன் கீழ் சிதரிகிடக்கும் அத்திப் பழங்கள், இன்னும் பல, அவனுக்கு மீண்டும் கிடைக்கப்போவது.
புழுதி தட்டி எழுந்து நின்றான், தன் மக்களுக்காக போராட அவன்...
விடியல் மெல்ல தெரிகிறது...
எண்ணமும், எழுத்தும்: கிருபா சரவணன்.
இது 'தமிழ்.net' வலைத்தளம் நடத்தும் சிறுகதை போட்டிக்காக.

அங்கே என் தமிழ் சொந்தங்களின் தலைகள் விதைகளாய்... இங்கே
ஒரு தலை கூட நிமிராமல் இருதலை கொல்லி எறும்புகளாய் நாம்...
இறைவா உன்னை தவிர நாங்கள் நம்புவது வேறு யாரும் இல்லை...
காப்பாற்று என் சொந்தங்களை...

வானம்
இரவில் வெண் முட்டை இட்டு, விடியலில்
அக்கினி குஞ்சை பொரிக்கும் அதிசய ப(றா) வை
-------------------------------------------------
என்ன ஆச்சரியம்! பகலில் விதைத்த ஒரே ஒரு சூரிய விடையால்
இரவில் பூத்து குலுங்கும் வனமாய் வானம் ...

அதிகாலை
வான பெண்ணின் நெற்றியில் அழகிய திலகமாக சூரியன் ...

உருகும் மெழுகுவர்த்தியாய் மேகம் ...
தன் கண்ணீரால் பூமியை வாழ்வளிக்கும் அன்னையாக ..

மழை
என்ன அழகு, பூமி குழந்தையை குளிப்பாட்டும் வான தாய்

புல்லாங்குழல்
மர நிலத்தில் காற்றை பாய்ச்சும் விசித்திர விவசாயம்
அதிசய அறுவடையாய் மெய் மறக்கும் மெல்லிசை...

கரைபட்டது குளக்கரை மட்டும் அல்ல
குளமும் தான்.. நீரில்லாமல் ...

மீன் இல்லை .. பூ இல்லை .. பரிசல் இல்லை .. நீரும் இல்லை ..
நான் மட்டும் உள்ளேன் குளமாய், பெயரில் மட்டும் ...

குளக்கரையில் நான்,
நீரை வேண்டி ...
- கிருபா. சரவணன்